N

 

TEACHING

அநேகரைப் போல, நாங்கள் தேவ வசனத்தைக் கலப்பாய் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்ட பிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம் (2கொரி 2:17), உபதேசங்கள் இல்லாமையினால் கிறிஸ்தவத்தில் வளர்ச்சியற்ற நிலைமையும், பெலவீனமான தன்மையும் காணப்படுகிறது உபதேசம் என்ற பேரில் சுமப்பதற்கரிய பாரமானதொன்றை ஜனங்கள் மீது வைக்கப்படும் நிலையும் காணப்படுவதும், சகஜமாயிப்போனது.


இனி சம்பவிக்கப் போகும் தேவ திட்டம் அறியாதவர்களாய் மந்தை காணப்படுகிறது. மறுஜென்ம காலத்தையே போதித்து வந்தார் நமது கர்த்தராகிய கிறிஸ்து. தற்போழுதோ உலக சுகபோக செளக்கியத்தை போதனையாக கேட்கும் காலத்தில் வந்துநிற்கிறோம், இந்த சூழ்நிலையில் கர்த்தருடைய வார்த்தையை கலப்பில்லாமல், தேவனால் அருளப்பட்டபடியே இனிவரும் காலங்களையும், நியாயத்தீர்ப்பையும், வருகையையும் உபதேசித்து, ஆயத்தப்படுத்தி வருகிறோம்.