N

 

தேவனாகிய கர்த்தருக்​கு ஸ்​தோத்திரம்!!!

 

கிறிஸ்துவுக்குள் புதுவாழ்வு ஊழியங்கள் தென்னிந்தியாவில்  தமிழகத்தின் ஒரு ஓரத்தில் அமைந்துள்ள இராமேஸ்வரம் என்ற குட்டித் தீவில் தங்கச்சிமடம் என்ற இடத்தில் இருந்து இயங்கி வருகிறது. மீன் பிடித் தொழிலை பிரதானமாகக் கொண்டிருக்கிற இத்தீவில் உள்ள மீனவ ஜனங்களுக்கு மத்தியில் துவங்கப்பட்ட இந்த ஊழியமானது வளர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் படர்ந்து வளர்ந்து வருகிற திராட்சைக் கொடிபோல இதன் எல்லையை தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், நாம் ஆராதிக்கிறவருமாகிய பரலோகத்தின் தேவன் ஆசீர்வதித்து நடத்தி வருகிறார்.


            கடந்த 2000-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிறிஸ்துவுக்குள் புதுவாழ்வு என்ற பெயரில் துவங்கப்பட்டது ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியா யிருக்கிறான், பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின, 2கொரி5:17 என்ற இந்த வசனத்தை மையமாகக் கொண்டு துவங்கப்பட்டது, ஏனெனில் கிறிஸ்தவ ஜீவியமானது புதிய அனுபவம் ஆகும். பழையவைகள் என்று சொல்லப்படும் பாவம், ஜென்ம சுபாவம், உலகம் ஆகிய இவைகளை விட்டு விலகி ஆவியாயும், ஜீவனுமாயுமிருக்கிற வேத வசனத்தின் படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, அவ்வசனங்களை ஆதாரமாகப் பிடித்துக் கொண்டு இப்படி வாழ்வதன் முடிவு நித்திய ஜீவன்.