N

 

about us

பாஸ்டர் ஜேம்ஸ்

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவராயிருந்தாலும் கிறிஸ்துவுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாத வராகவே வாழ்ந்து வந்தார். சிறு வயது முதல் விடுமுறை வேதாகமப் பள்ளியின் மூலம் போதிக்கப்பட்டு வந்தாலும் சரியான மனந்திரும்பின அனுபவமோ, கிறிஸ்தவ வாழ்வின் நெறிமுறைகள் அறியாதவராக உலக வழக்கத்தின்படியே தனது வாழ்வை வீணாக்கிக் கொண்டிருந்தார்.


1988-ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த துவக்கக் காலத்திலேயே, சுவிசேஷத்தை கேட்டு, மனந்திரும்ப வேண்டிய அவசியத்தை அறிந்து தன் பாவங்கள் மற்றும் அறியாமைக்காக மனஸ்தாபப்பட்டு, தனது வாழ்வை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்த நாளிலிருந்து தனது வாழ்கை மாறத் துவங்கியதை உணர்ந்தார். ஆண்டவரை ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்கிற சபையின் ஐக்கியம் கொண்டு, ஞானஸ்நானம் பெறவும், பரிசுத்தாவியின் அபிஷேகம் பெறவும் தேவ அனுக்கிரகம் பெற்றார்,


தினமும் பரிசுத்தாவிக்குள் நிறைந்து ஜெபிக்கும்படி தேவ அன்பினால் ஏவப்பட்டதினால் அந்த ஜெபத்தின் பலனாக சக மாணவர்களையும் இரட்சிப்பின் அனுபவத்தில் வழிநடத்தினார். தொடர்ந்து தனது சொந்த கிராமத்தில் நடத்திய சிறு ஜெபக்கூட்டங்களில் சில சகோதரிகள் மனந்திரும்பவும், அசுத்த ஆவியினால் பிடிபட்டவர்கள் விடுதலை பெற்று, சுகம் பெறவும், வியாதியஸ்தர்கள் குணமடையவும், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் வல்லமையாக தமது கரத்திலே எடுத்து பயன்படுத்தத் துவங்கினார்.


கிறிஸ்துவின் அன்பு நெருங்கி ஏவினபடியால் தனது கல்லூரிப் படிப்பை முடித்த உடன் முழு நேரமாக கிறிஸ்துவுக்காக சேவை செய்யத் துவங்கி சபைகளில் பொறுப்பு வகித்து பின்னர் கடந்த 2000ம் ஆண்டு மாதம் “கிறிஸ்துவுக்குள் புதுவாழ்வு” என்ற பெயரில் ஊழியத்தை துவங்கி, இயேசு கிறிஸ்துவுக்குள் புதுவாழ்வு என்ற தமிழ் மாத இதழ் ஒன்றும் நடத்தி வருகிறோம் மற்றும் தேவ சித்தத்தின்படி கர்த்தர் தெரிந்து கொண்ட இடத்தில் சபைகளை ஸ்தாபித்து நடத்திக் கொண்டு வருகிறார்.


மேலும் இந்த கடைசி காலத்தில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும், இனி உண்டாகும் உலகத்தைக் குறித்தும் அழைக்கப்படும் திருச்சபைகளில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் போதித்து ஜனங்களை கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுத்துவதும், இளையத்தலைமுறைக்கு பயிற்சியளித்து அவர்களைக் கொண்டு சபைகளை கட்டி எழுப்புவதும் தரிசனமாக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.